Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் நண்பர் இப்போ ஹீரோ - விபரம் உள்ளே

தமிழ் சினிமாவில் பொறுத்தவரை எப்போ என்னவேணுடுமானாலும் நடக்கலாம். சாதாரண நடிகராக இருந்தவர்கள் தொடமுடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்ததெல்லாம் சமீபத்திய சினிமாவில் நடந்தது உண்டு.

ஏன் புதுப்பேட்டையில் தனுஷுடன் துணை நடிகராக நடித்த விஜய் சேதுபதி இன்று முன்னணி கதாநாயகன் லிஸ்டில் இருக்கிறார்.

அந்த வகையில் அச்சம் என்பது மடமையடா படத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் சிம்புவின் நண்பராகவும் நடித்த கார்த்திக், பீச்சாங்கை படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் அசோக் இயக்க கார்ச என்டர்டைன்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படம் ஒரு ஏலியன் சம்பந்த பட்ட கதை என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் பஸ்ட் லுக்கை கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்டுள்ளார்.