Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, விஜய் அடுத்து சிவகார்த்திகேயனா?

ராக் ஸ்டார் என்ற பட்டத்தை பலரும் இன்று தங்களுக்கு சூட்டிக்கொள்கின்றனர். அது எதற்காக என்று அவர்களுக்குமே தெரியாது, ஆனால், உண்மையான ராக் ஸ்டார் என்பவர் யார் தெரியுமா?, அனைத்து கஷ்டங்களை கடந்து மக்கள் மனதில் இடம்பிடிப்பவர் தான்.

அப்படிப்பட்ட ஒரு ராக் ஸ்டார் தான் சிவகார்த்திகேயன், சின்னத்திரையில் தனக்காக ஒரு அங்கீகாரம் தேடி தேடி அழைந்த கால்கள், சோர்ந்த கண்கள் ஒரு போதும் முயற்சி எடுப்பதற்கு மட்டும் சோர்ந்ததே கிடையாது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தனக்கு கிடைத்த சின்ன, சின்ன வாய்ப்புக்களை கூட, நான் பெஸ்ட்டாக செய்து காட்டுவேன், என செய்து ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களின் மனதையும் கொள்ளை கொண்டார்.

ஒரு காமெடியனாக சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று திரையில் காலடி எடுத்து வைத்தவர், உன் இடம் இது இல்லை, நீ வேறு லெவலுக்கு செல்ல வேண்டும் என ஒரு சிலரின் நல்ல வழிகாட்டுதலால், ஹீரோவாக அரிதாரம் பூசினார்.

மெரீனா, மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சஙம், மான் கராத்தே, காக்கிசட்டை, ரஜினி முருகன், ரெமோ என தொடர்ந்து 9 படங்கள் ஹிட் கொடுத்த ஒரே நாயகன் ரியல் ராக் ஸ்டார் ப்ரின்ஸ் சிவகார்த்திகேயன் தான்.

சிவகார்த்திகேயன் வெற்றியை மட்டுமே பார்ப்பவர்கள் ஒரு போதும் அவர் கடந்த வந்த கஷ்டங்களை பார்ப்பது இல்லை, அவரின் அத்தனை கஷ்டத்திற்கும் கிடைத்த பலன் தான் ரஜினி, விஜய்க்கு பிறகு அத்தனை வயது ரசிகர்களும் ரசிக்கும் ஒரே நாயகனாக சிவகார்த்திகேயன் வளர்ந்து நிற்கின்றார்.

தமிழகத்தின் ப்ரின்ஸ் விரைவில் கிங்காக மாற சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று சினிஉலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

Duvvada Jagannadham திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments