Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலை வார்த்தைகளால் தாக்கிய ஸ்ரீகாந்த்- நண்பர்களுக்குள் விரிசல்

விஷால், ஸ்ரீகாந்த் இருவரும் நல்ல நண்பர்கள் தான். விஷால் நடிகர் சங்க தேர்தலில் நின்ற போது தன் முழு ஆதரவையும் ஸ்ரீகாந்த் தந்தார்.

ஆனால், சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஸ்ரீகாந்த் மிகவும் கோபமாக விஷாலை வார்த்தைகளால் தாக்கினார்.

இதில் இவர் பேசுகையில் ‘ஒருவர் நடிகர் சங்கத்தில் உள்ள அத்தனை பிரச்சனைகளையும் தீர்ப்பேன் என கூறிக்கொண்டு சங்க தேர்தலில் போட்டிப்போட்டார்.

நானும் அவர்களுக்காக இறங்கி வேலை செய்தேன், ஆனால், அந்த வேலையை விட்டு, தற்போது வேறு ஒரு சங்க தேர்தலில்(தயாரிப்பாளர் சங்கம்) போட்டிப்போட போகிறேன் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

மேலும், என்னை போலவே பல நடிகர்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ளனர், அவர்கள் மனநிலையை புரிந்துக்கொள்ளுங்கள்’ என ஸ்ரீகாந்த் மறைமுகமாக விஷாலை தாக்கினார்.