Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கல்லூரி விவகாரம்- நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி கைதாகிறாரா?

ஊட்டி உசிலமேடு மற்றும் தொட்டபெட்டா சந்திப்பு ஆகிய இடங்களில் தனியார் கல்லூரிகள் இயங்கி வந்தன. இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை கல்லூரி நிர்வாகத்தினர் புதுப்பிக்காமல் விட்டு விட்டதாக, இந்த கல்லூரியில் படித்த உடுமலைபேட்டையை சேர்ந்த மாணவர் பிருத்திவிராஜ் கடந்த 2012ம் ஆண்டு ஊட்டி நகர மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதுதொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி மற்றும் மாமனாருக்கு சம்மன் அனுப்பப்பட்டும், அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, மாமனார் சாரங்கபாணி, மாமியார் ஷாலினி, கல்லூரி நிர்வாகிகள் அசோக்குமார் மற்றும் அசோக் சிவக்குமார் ஆகிய 5 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.