Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்த சந்தோசம் தாண்டி வருத்தம் இருக்கிறது - எஸ் ஆர் பிரபு

கடந்த ஆண்டு நடிகர் குருசோமசுந்தரம் நடித்த ஜோக்கர் படம் மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றது. இந்நிலையில் தேசிய விருது கிடைத்த சந்தோஷ பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில் “ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம். இருந்தாலும் எங்கள் நாயகன் குரு சோமசுந்தரம் அவர்களுக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தோம்.

அவருக்கும் கிடைத்திருந்தால் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் கூடி வரும்போது ‘ஜோக்கர்’ திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்

Comments