Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்டாலின் முதல் சீமான் வரை அனைவரையும் பற்றி பேசிய ரஜினிகாந்த்

ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி இறுதி நாளான இன்று மீண்டும் ரசிகர்கள் முன்னிலையில் பேசியிருந்தார். அப்போது அவர், அரசியல் மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றியும் பேசியிருந்தார்.

ஸ்டாலின் மிகச்சிறந்த நிர்வாகி, அவருக்கு மட்டும் சுதந்திரம் கொடுத்தால் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று சோ அவர்கள் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் நல்ல படிப்பாளி, உலகம் முழுவதும் சுற்றிய முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர். தலித்துக்காக போராடி வரும் திருமாவளவன் அவர்களும் ஒரு திறமைசாலிதான். சீமான், ஒரு நல்ல போராளி, அவர் தெரிவித்த ஒருசில கருத்துக்களை கேட்டு பிரமித்து போயுள்ளேன்.

ஆனால் சிஸ்டம் கெட்டு போய் உள்ளது, ஜனநாயகமே கெட்டு போயுள்ளது. எனவே சிஸ்டத்தை மாற்றம் செய்ய வேண்டும், மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று பேசியுள்ளார்.

சங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments