Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா, தனுஷுடன் நடிக்க விரும்பும் நடிகை- யார் அவர்?

நடிகைகள் சினிமாவில் நுழையும் போது இளம் நடிகர்களுடன் நடிக்க தொடங்குவர். பின் அவர்கள் படங்கள் வெற்றியடைந்து வந்தால் அடுத்து பெரிய நடிகர்களுடன் இணைவர்.

அப்படி தான் சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. தற்போது அவருக்கு சூர்யா, தனுஷுடன் இணைந்து நடிக்க ஆசையாம்.

இதுகுறித்து அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் பல முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்டேன். தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சூர்யா, தனுஷ் எனக்கு பிடித்தமான ஹீரோக்கள், எனவே, அவர்களுடன் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.