Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணம், விவாகரத்து இரண்டிற்கும் நானே காரணம்- மனம் திறக்கும் பிரபல நாயகி

பிரபலங்களின் திருமணம், விவாகரத்து, இரண்டாவது கல்யாணம் என நாம் நிறைய பார்த்து வருகிறோம். அப்படி திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடத்திலேயே விவாகரத்து பெற்றவர் நடிகை மனிஷா கொய்ராலா.

வரும் வெள்ளிக்கிழமை இவர் நடித்த டியர் மாயா என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் திருமண வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், திருமணம் என்று ஏதேதோ கனவு வைத்திருந்தேன்.

அவசரப்பட்டு திருமணம் செய்து பிறகு இது நமக்கு சரிவராது என்று உணர்ந்தேன். இதற்கு நானே முழுப் பொறுப்பு ஏற்கிறேன். யார் தப்பும் கிடையாது, என் தப்பு தான்.

என் வாழ்க்கை, என் வேலை நிம்மதியாக இருக்கிறது. இதுபோலவே வாழ்ந்து விட நினைக்கிறேன் என்று பேசியுள்ளார்.