Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை மேல்முறையீடு

நடிகை திரிஷா 2010, 11ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

கடந்த 2010, 2011ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த திரிஷாவின் கணக்கில் உண்மையான வருமானத்தை மறைத்திருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

பின்னர், அதிகாரிகள் நடிகை திரிஷாவின் வருமானம் ரூ.3 கோடியே 50 லட்சம் என்று நிர்ணயம் செய்தனர். அதன்பிறகு இந்த கணக்கிற்கு ஏற்றவாரு திரிஷா வரியையும் செலுத்தினார். ஆனால் திரிஷா உண்மை கணக்கை மறைத்தார் என்று வருமான வரித்துறையினர் நடிகை திரிஷாவுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் அபராதம் விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகை திரிஷா முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், வருமான வரித்துறை சுட்டிக்காட்டிய வருமானத்துக்கு திரிஷா கணக்கு காட்டி, வரியையும் செலுத்தியுள்ளார். எனவே, அவருக்கு அபராதம் விதிப்பது தேவையற்றது என்று கூறி, அந்த அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமான வரித்துறை ஆணையர் மேல்முறையீடு செய்தார். அண்மையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை வருகிற 13ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.