Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் மகளுக்கு ஏன் இந்த பிழைப்பு- பிரபல நடிகரின் வருத்தம்

பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் தற்போது அதிகமாக களமிறங்கி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சயிப் அலிகானின் மகள் சாரா சினிமாவில் அறிமுகமாக விரும்புகிறாராம்.

ஆனால் சயிப் அலிகானுக்கு இது பிடிக்கவில்லையாம். தனது மகள் சினிமாவில் அறிமுகமாவது பற்றி பேசும்போது அவர், சாராவுக்கு எதுக்கு இந்த பிழைப்பு? அவர் எங்கு படித்திருக்கிறார் என்று பாருங்கள். அவர் படித்த படிப்புக்கு அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதை விட்டுவிட்டு நடிப்பு எதற்கு?

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

நடிப்பு தொழிலை குறை கூறவில்லை, இது நிலையான தொழில் இல்லை என்று கூறுகிறேன். நிலையற்ற தன்மை உள்ள இந்த வாழ்க்கையை பிள்ளைகள் தேர்வு செய்ய வேண்டும் என்று எந்த பெற்றோரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் சாராவுக்கு நடிகையாவது தான் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments