Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி அப்படியிருந்தால், சங்கமித்ரா இப்படி இருக்கும்- ஜெயம் ரவி ஓபன் டாக்

ஜெயம் ரவி நடிப்பில் இந்த வாரம் வனமகன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை விஜய் இயக்கியுள்ளார்.

ஹாலிவுட்டில் வெளியான டார்ஜன் கதை போல் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இவரிடம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் சங்கமித்ரா பற்றி கேட்கப்பட்டது, மேலும், அப்படத்தை பாகுபலியிடம் ஒப்பிட்டு கேட்டனர்.

அதற்கு அவர் ‘பாகுபலி ஒரு ராமாயணமா இருந்தால் நாங்க ஒரு மகாபாரதமா இருப்போம். பாகுபலி மகாபாரதமா இருந்தால் நாங்க ராமாயணமா இருப்போம்’ என்று கூறியுள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments