Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை பிடிக்காதவர்களுக்கு ஒரே விஷயம் சொல்கிறேன் - கவுதம் கார்த்திக் வேதனை

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற திரையரங்கு ஸ்ட்ரைக் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று முதல் வழக்கம் போல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன, கடந்த வாரம் வெளியான இவன் தந்திரன், வனமகன் யானும் தீயவன் போன்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இவன்தந்திரன் மற்றும் வனமகன் இரண்டு படகுழுவும் ஒன்றாக பத்திரிக்கையாளராகளை சந்தித்தனர். இதில் கவுதம் கார்த்திக் பேசுகையில் இந்த திரையரங்கு ஸ்ட்ரைக் என்னை மிகவும் பாதித்துள்ளது, ஆனால் ஒரு நல்லதுக்காக நடக்கவேண்டிய சூழ்நிலையை உணரவேண்டி இருந்தது.

இன்றுடன் திரையரங்கு ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது அறிந்தவுடன் தயவு செய்து இவன் தந்திரன் படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள் என்று ட்வீட் போட்டு இருந்தேன், ஒரு நண்பர் நாங்கள் தமிழ் ராக்கர்ஸ் ல பார்ப்போம் என்று கூறியிருந்தார், என்னை பிடிக்கவில்லை என்றாலும் நீங்கள் எனக்காக பார்க்கவேண்டாம், இந்த படத்தில் பணிபுரிந்த பல தொழில்நுட்ப கலைஞர்களுக்காக பாருங்கள் என்று தயவு கூர்ந்து கேட்டுக்கொண்டார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments