Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் வாழ்க்கையில் நடந்த சில நிஜங்கள் தான் இந்த மீசையை முறுக்கு - ஹிப்ஹாப் ஆதி நம்பிக்கை

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து இந்த வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் மீசையை முறுக்கு.

இந்த படத்தை பற்றி ஆதி கூறுகையில் " இப்படம் ஒரு இளைஞர்களுக்கான படமாக இருக்கும், நம்முடைய காலேஜ் காலங்களை நினைவுபடுத்தும், ஒவ்வொரு இளைஞர்கள் தங்களுடைய கல்லூரி முடிந்தவுடன் அவர்களின் கனவுக்கான தேடுதல் எப்படி இருக்கும் என்பதை காட்டும், என் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளேன். இப்படத்தில் நடிகர் விவேக் எனக்கு அப்பாவாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் யூடுப் ஸ்டார்களாக இருக்கும் ஷா ரா , விக்னேஷ் காந்த் , மெட்ராஸ் சென்ட்ரல் கோபி போன்றவர்களின் பங்களிப்பு ரசிகர்களை ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை .

மொத்தத்தில் கண்டிப்பாக இந்த மீசையை முறுக்கு இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்க கூடிய படமாக இருக்கும் என்கிறார் ஹிப் ஹாப் ஆதி,

வல்லதேசம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments