Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் சர்ச்சையில் கபாலி நடிகை! பத்திரிகையாளர்களிடம் இப்படியா நடந்துகொள்வார்?

ரஜினி நடித்த கபாலி படம் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.

அவர் தற்போது சைப் அலிகானுடன் பஜார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் உள்ள ஒரு மாலில் இன்று நடந்தது, அப்போது அங்கிருந்த பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் அவரை புகைப்படம் எடுக்க துவங்கிவிட்டனர்.

அதை பார்த்து டென்ஷனான ராதிகா ஆப்தே, அவர்களிடம் சென்று படங்களை உடனே டெலிட் செய்துவிடுங்கள் என கோபமாக தெரிவித்துள்ளார்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ராதிகா இப்படி நடந்துகொண்டிருக்க கூடாது என பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்த படத்தில் அவரின் தோற்றத்தை வெளியிட விரும்பாததால் தான் இப்படி அவர் செய்துள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது.

Comments