Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ஓவியா வர வாய்ப்பு உள்ளதா? காயத்ரியை ஏன் காப்பாற்றினோம் - விளக்கமளித்த பிக் பாஸ்

ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வார இறுதியில் வரும் கமலின் அதிரடியைத்தான். மக்களின் சந்தேகங்களை அதிரடியான கேள்விகள் மூலம் தீர்த்து வைப்பார்.இன்று மேலும் ஒருபடியாக பிக்பாஸ் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் ஸ்ரீப்ரியா, சதிஷ் இருவரையும் அழைத்து பேசியுள்ளார்.

இதில் ஸ்ரீப்ரியா கமலிடம் ஏன் காயத்ரியை திடிரென்று நேற்று காப்பாற்றியுளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் இந்த கேள்விக்கு எனக்கும் விடை தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

உடனே பிக் பாஸ் ஒவ்வொரு வாரமும் நடக்கும் நாமினேஷன் வழிமுறைகளை பங்கேற்பாளர்கள் சரியாக எடுத்துக்கொள்ளாமல் இந்த வாரம் விளையாட்டுத்தனமாக இருந்தனர், வேறு வழியில்லாமல் எல்லாரையுமே இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்டில் எடுத்த கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது.

அதுவுமில்லாமல் இந்த பிக் பாஸ் கேம் ஷோ எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தினோம். ஆனால் பங்கேற்பாளர்கள் சில சமயங்களில் நேர்மையாக இல்லாமல் வீட்டில் உள்ளவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சரியான காரணத்தை சொல்ல தவற விட்டனர்.

இந்த கேம் ஒரு இன்டர்நேஷனல் பார்மட் ஷோ, இந்த விளையாட்டில் சில விசித்திரமான விதிமுறைகள் உள்ளன , அதாவது மக்களே ஒட்டு போட்டு வெளியேற்றிய பங்கேற்பாளர்கள் கூட மீண்டும் திரும்ப வரலாம், அதே போல் மக்களுக்கு பிடித்த பங்கேற்பாளர்கள் கூட மீண்டும் திரும்ப வரலாம் என்று விளக்கமளித்தார். இதன் மூலம் மீண்டும் ஓவியா திரும்ப வாய்ப்பு உள்ளது என்று எண்ணி ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பினர்.

விவேகம் திரை விமர்சனம்
Comments