Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த நடிகையுடன் டூயட் பாட ஆசை, ஹீரோ எப்போ ?- சூரியின் ருசிகர பதில்

கோலிவுட்டில் சந்தானத்துக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி. இந்த நிலையில் சமீபத்தில் சினிமாவில் தான் கடந்து வந்த பாதை குறித்தும், பயணம் குறித்தும் பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் சூரி.

குறிப்பாக எந்த ஹீரோயினுடன் டூயட் பாட ஆசை? என்று கேட்டபோது, “எல்லாருடனும் தான். குறிப்பாக நயன்தாராவுடன் டூயட் பாட ஆசையாக தான் இருக்கிறது. ஆனால், இதை அறிந்து அவர்கள் என் மீது வழக்கு ஏதாவது போடப்போகிறார்கள் என்று பயமாகவும் இருக்கிறது” என்றார்.

மேலும் ஹீரோவாக எப்போது நடிக்க போகிறீர்கள்? என்று கேட்டபோது, “எனக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. வரவும் மாட்டேங்குது. காமெடியில் இன்னும் செய்ய வேண்டியதே அதிகமாக இருக்கிறது. அதை தான் செய்ய தோன்றுகிறது” என்றார்.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments