Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரியலூர் மாணவியை ஏமாற்றிய விவகாரம்- பொறுப்பாக செயல்பட்ட விஜய் நற்பணி மன்றம்

இளையதளபதி விஜய்யின் நற்பணி மன்றம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. அண்மையில் விஜய் ரசிகர் ஒருவர் அரியலூர் மாணவி ரங்கீலா என்பவரின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாக கூறி பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாக சில நாட்களாக செய்திகள் வந்தன.

தற்போது இதுகுறித்து விஜய்யின் அரியலூர் நற்பணி மன்றம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ஜோஸ்பிரபு என்பவர் விஜய் நற்பணி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் அவர் அளித்த வாக்குறுதிகள் குறித்து இயக்கத்தின் உள்ளூர் நிர்வாகிகள் உள்பட யாருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அதோடு நற்பணி மன்ற பெயர் சொல்லி ஒருவர் ஏமாற்றியதால் அப்பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டு அரியலூர் நற்பணி மன்றம் அப்பெண்ணுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments