Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த கதையை 16 நடிகர்களுக்கு பிறகு கவுதம் கார்த்திக் தான் ஓகே சொன்னார் !

இந்த வாரம் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்துள்ள ஹரஹர மஹாதேவகி படம் வெளியாகிறது. இப்படம் ஒரு அடல்ட் காமெடி கதையாசமுள்ள படம். பொதுவாக இம்மாதிரியான படங்கள் தமிழில் பார்ப்பது அரிது, ஹாலிவுட்டில் மிக பிரபலமான இம்மாதிரியான படங்கள் தமிழில் எடுக்க முயற்சி செய்ய தொடங்கியுள்ளனர்.

2015ம் ஆண்டு இதே வகையான அடல்ட் காமெடி படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா தமிழகத்தில் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் ஹரஹர மஹாதேவகி படத்தை பற்றி இயக்குனர் சந்தோஷ் கூறுகையில், "இந்த படம் ஒரு அடல்ட் காமெடி என்றாலும் ஆபாசம் நிறைந்த காட்சிகள் காட்டவில்லை. 4 நண்பர்கள் ஒன்று சேர்ந்து லூட்டி அடித்தால் எப்படி இருக்கும் என்பதை தான் இந்த ஹரஹர மஹாதேவகி. வசனம் மற்றும் காதல் காட்சிகளில் கொஞ்சம் புதுமையை செலுத்தியிருக்கிறோம்.

மேலும் கவுதம் கார்த்திக்கு முன்பு கிட்டத்தட்ட 16 நடிகர்களிடம் இப்படத்தின் கதையை கூறியிருக்கிறேன். யாருமே நடிக்க முன்வரவில்லை, சில பேர் படத்தின் தலைப்பை கேட்டவுடனே வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் கவுதம் கார்த்திக் தான் தைரியமாக ஒப்புக்கொண்டார் என்று சந்தோஷ் தெரிவித்தார்.

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments