Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல மாஸ் நடிகர் ராஜசேகரின் தாயார் மரணம்

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ராஜசேகர். இதுதாண்டா போலீஸ் உட்பட 75 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் பிரபல நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார். இவரது மகள் ஷிவானியும் விரைவில் நடிகையாகவுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இவர் பெரும்பாலும் ஆந்திரா சினிமாவில் தான் அதிகம் நடித்தார். இந்நிலையில் 82 வயதான இவரது தாயார் ஆண்டாள் வரதராஜ் நேற்று (புதன்) காலமானார்.

ஹைதராதபாத்திலிருந்து இவரது தாயாரின் உடல் கொண்டு வரப்பட்டு இன்று சென்னையில் உள்ள வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

Comments