Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ரஜினி நடித்த படம்- சுவாரஸ்ய தகவல்

இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிகர் ரஜினியை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டியில் அவர், ஒரு நாள் ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் இரண்டு பேரும் ஒரு கதையை எனக்கு சொன்னார்கள். கதை நன்றாக இருக்க அதை ரஜினியிடம் போய் கூறுங்கள் என்றேன். கதையை கேட்டு பிடித்தபோன ரஜினி என்னிடம், கதை சூப்பர், நாம் இருவரும் இந்த படத்தில் பணிபுரிவோம், நீங்கள் தான் இப்பட இயக்குனர் என்றார்.

படத்திற்காக ரூ. 10 லட்சம் எடுத்து கொண்டு அவருக்கு அட்வான்ஸ் தர சென்றேன். பணப்பெட்டியை பார்த்ததும் ரஜினி அதை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்றார்.

என்னிடம் நூறு ரூபாய், ஜம்பது ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் உள்ளது என்றேன். ரஜினி அந்த இரண்டு ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டு படம் நடித்துக் கொடுத்தார் என்றார்.

Comments