Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படம் வெளியாகும் திரையரங்கு முன்பு தீக்குளிப்போம் - அரியலூர் மாவட்டம் இயக்கத்தில் பிரச்சனை !

வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளிவருகிறது தளபதியின் மெர்சல். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது, பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் வெளிவரவுள்ளது, ஆனால் இன்னும் பிரச்சனைகள் ஓய்ந்த பாடியில்லை.

அரியலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் சிவா மீது ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் நகர நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.’16 வருஷமாக உழைத்த நகர நிர்வாகிகளை நீக்கிவிட்டுப் புதிய நிர்வாகிகளைத் தலைமைக்குத் தெரியாமல் அவராகவே நியமித்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் கேள்விகேட்டால் எந்தப் பதிலும் சொல்வதும் கிடையாது அதேபோல் அவரிடம் கேட்காமல் தலைமையிடம் பேசக் கூடாது என்று எச்சரிக்கிறார். நான் தலைமையைத் தொடர்புகொண்டதால் என்னை நீக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார் உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் மாவட்டத் தலைவருக்கு இல்லை, நிர்வாகிகளை நீக்கவோ சேர்க்கவோ நடிகர் விஜய் மற்றும் அவரின் தந்தைக்கு மட்டுமே உள்ளது. இயக்கத்தின் மேலிடத்திலிருந்து நீக்கியதாகக் கடிதம் வந்தால் மட்டுமே நாங்கள் நீக்கப்பட்டதாக அர்த்தம்.

எங்களை இயக்கத்திலிருந்து நீக்க மாவட்டத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. மெர்சல் படத்தின் ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகளை எங்களுக்குத் தரவில்லை என்றால் படம் வெளியாகும் தியேட்டர் முன்பு தீக்குளிப்போம்’' என்று கூறினார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments