Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவியை கொடுமைப்படுத்திய விவகாரம்- போலீஸில் ஆஜரான தாடி பாலாஜி, நடந்தது என்ன?

வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் ஒரு காமெடியனாக கலக்கியவர் தாடி பாலாஜி. காமெடிகள் மூலம் பலரை சிரிக்க வைத்த இவர் தனது மனைவி மற்றும் குழந்தையை எப்படி வைத்திருக்கிறார் என்று நிறைய செய்திகள் வந்துவிட்டன.

இவரது மனைவி நித்யா 2 மாதங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாடி பாலாஜி மீது வன்கொடுமை புகார் அளித்தார். ஆனால் போலீசார் தாடி பாலாஜியை விசாரிக்கவில்லை என்று தொடர்ந்து ஊடகங்களில் பேசி வந்தார் நித்யா.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன், தாடி பாலாஜி ஆஜரானார். அவரை போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையை நடத்தியுள்ளார்.

இந்த விசாரணையில் போலீசார் என்ன முடிவு செய்தார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

Comments