Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பைனான்சியர் அன்புச் செழியனுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் பிரபலங்கள்

தயாரிப்பாளர் அசோக் குமார் அவர்களின் தற்கொலை விவகாரம் சினிமா பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அதோடு அன்புச் செழியன் என்ற பைனான்சியரால் தான் தற்கொலை செய்ததாகவும் அவர் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

இந்த தகவலை கேட்ட பல பிரபலங்கள் சில பைனான்சியர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அன்புச் செழியனுக்கு ஆதரவாக நடிகை தேவயானி பேசியுள்ளார். அவர் மிகவும் சிறந்த மனிதர், ஜென்டில் மேன் என்று நடிகை கூறியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஏனெனில் இதற்கு முன் காதலுடன் படத்திற்காக நடிகை தேவயானி அன்புச் செழியனிடம் பைனான்ஸ் வாங்கியிருக்கிறார். அதனை திருப்பி தர முடியாததால் தேவயானியை அவர் மிரட்டியதாக செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது அன்புச் செழியனை பாராட்டியதோடு அந்த தகவல்கள் எல்லாம் பொய் என்றும் தேவயானி கூறியுள்ளார்.

இவரை போல் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியும் அன்புச் செழியனுக்கு ஆதரவு தந்துள்ளார்.