Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதைகூட கவனிக்காமல் புகார் சொன்ன விஷால் - கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட நினைத்த விஷாலின் வேட்பு மனுவை நிரகரித்தது தேர்தல் ஆணையம்.

இதை எதிர்த்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விஷால் புகார் மனு கொடுத்தார்.

ஆனால் இந்த மனுவில் ராஜேஷ் லகானி, தேர்தல் ஆணையர் என்றும், மாநில தேர்தல் ஆணையம், அரும்பாக்கம் என்றும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷால் புகார் அளித்ததோ தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்தேர்தல்களுக்கான அதிகாரியிடம் ஆனால் புகார் மனுவில் இடம்பெற்றிருந்த முகவரியோ உள்ளாட்சி தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையரின் கோயம்பேடு முகவரி.

இதை வழக்கம்போல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.