Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு ரசிகர்கள் செய்த வேலை, தனுஷின் பெருந்தன்மை- நேற்றைய நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்

சிம்பு தனக்கென்று ஒரு நல்ல ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். ஆனால், இவர் ஒழுங்காக ஷுட்டிங் வருவது இல்லை, தயாரிப்பாளரை புலம்ப விடுகின்றார் என பல குற்றச்சாட்டுகள் இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் நேற்று சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்துக்கொண்டு பேசினார்.

இதற்கு முன்பு நடிகர் தனுஷ் பேசும் போது சிம்பு ரசிகர்கள் அனைவரும் கூச்சலிட, தனுஷ் மிகவும் பொறுமையாக ‘விடுங்க, இது அவர் விழா, கண்டிப்பா அவருடைய ரசிகர்கள் தான் கொண்டாட வேண்டும்’ என்று பொறுமையாக சொல்லி ரசிகர்கள் கூச்சலிட்டு முடிக்கும் வரை அமைதி காத்தார்.

இப்படி தனுஷ் பேசியது அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது, அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.