Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை ஆதரித்து பரிந்துரை செய்தவர்கள் காணவில்லை - விஷால்

கடந்த இரண்டு நாட்களாக விஷாலின் ஆர் கே நகர் வேட்புமனு நிராகரிப்பு பற்றி தான் பேச்சு. விஷாலின் ஆர் கே நகர் வேட்புமனு நிராகரிக்க பட்ட நிலையில் விஷாலை முன்னிலைப்படுத்தி கையளித்து போட்ட அந்த இரண்டு பேர் சுமதி, தீபன் இன்று 3 மணிக்குள் ஆஜர் படுத்தி விளக்கம் கொடுத்தால் வேட்புமனுவை ஏற்க முடியும் என்று தகவல் விஷாலுக்கு கிடைத்தது.

உடனே இந்த செய்தி அறிந்த விஷால் அவர்களை தொடர்பு கொள்ளமுயற்சி செய்தார். ஆனால் அவர்களை எங்கு தேடியும் காணவில்லை.

இதுபற்றி செய்தியாளர்களிடம் விஷால் பேசுகையில் என்னை முன்மொழிந்தவர்கள் இரண்டு பேர் காணவில்லை, அவர்களை எங்கு தேடியும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இப்போது என் மனு ஏற்பதை விட அவர்களின் பாதுகாப்பு முக்கியம். இதை பற்றி நான் போலீசாரிடம் புகார் அளிக்கவுள்ளேன் என்று கூறினார்.