Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு பற்றிய சர்ச்சைகள் தான் எனக்கு பொழுதுபோக்கே- பிரபல நடிகரின் டாக்

சிம்பு நடிகர், பாடகர், இயக்குனர் என்பதை தாண்டி தற்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். சந்தானம் நடிக்கும் சக்க போடு போடு ராஜா என்ற படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கும் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திராக தனுஷ் கலந்து கொண்டார். மேலும் ரோபோ ஷங்கர், ஹரிஷ் கல்யாண், சேது போன்றோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சேது, இரவு நேரங்களில் எனக்கு தூக்கம் வராதபோது சிம்பு பேசிய வீடியோக்களை தான் பார்ப்பேன். சிம்பு ஒரு சர்ச்சை நடிகர் என்று கூறியுள்ளார்.

பிறகு மேடையில் காமெடிக்காக தான் சொன்னேன் என்று சிம்புவை பார்த்து கூறிவிட்டு, பின் அவரை பற்றிய நல்ல விஷயங்களையும் பேசினார்.