Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்றாவது முறையாக முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா- ரசிகர்கள் உற்சாகம்

சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இவர் இறுதிச்சுற்று சுதா, மாநகரம் லோகேஷ் இயக்கத்திலும் நடிக்க சம்மதித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

தற்போது சூர்யா ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும்விதமாக அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்தும் சூர்யாவும் மீண்டும் இணையவுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.

நீண்ட நாட்களாக இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வர தற்போது இதற்கு சூர்யா சம்மதித்துள்ளதாக தெரிகின்றது, இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.