Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவிலேயே மூன்றாவது இடம் விஜய்க்கு, வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை

தளபதி விஜய்யின் மார்க்கெட் தற்போது தமிழகம், கேரளா தாண்டி இந்தியா முழுவதும் வளர்ந்துவிட்டது. இதற்கு இவரின் மெர்சல் படம் அடைந்த வெற்றியே ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

இந்நிலையில் இந்த வருடம் தொலைக்காட்சி TRP-யில் அதிகம் பேர் பார்த்த நடிகர்களின் படங்களில் விஜய் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அதாவது, இந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய விஜய் படங்களை இந்தியா முழுவதும் பார்த்தோர்களின் எண்ணிக்கை 119 மில்லியனாம்.

முதல் இரண்டு இடங்களில் பாலிவுட் மற்றும் தெலுங்கு நடிகர்கள் இருக்க, மூன்றாவது இடத்தில் விஜய் உள்ளார். மேலும், வேறு எந்த தமிழ் நடிகர்களும் இந்த லிஸ்ட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.