Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அருவி எனக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது - கார்த்தி !

கடந்த வாரம் வெளிவந்த அருவி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற இப்படம் பல திரையுலக நட்சத்திரங்களும் படத்தை புகழ்ந்து தங்களது டிவிட்டர் பக்கங்களில் ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர்.

அந்த வரிசையில் நடிகர் கார்த்தி "தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை, ‘அருவி’ எனக்குள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகத்திற்கான சாட்டையடி கேள்விகளை கேட்ட இயக்குநர்,

நல்ல என்டர்டெயினராகவும் படத்தை நகர்த்தியிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. அதிதியின் அர்ப்பணிப்பு அற்புதம். படத்தின் காட்சியமைப்புகள், இசை என அனைத்துமே ஒரு புதிய அனுபவத்தை தந்தது” என்று கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.