Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனரை ஜெய் தற்கொலைக்கு தூண்டியதற்கு இதுதான் காரணமாம்!

நடிகர் சிம்புவை தொடர்ந்து ஜெய்யின் மீது தயாரிப்பாளர் பகீரங்க குற்றச்சாட்டு வைத்தார். இதில் ஜெய் குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவார், ஒழுங்காக ஒத்துழைக்கவில்லை. இதனால் இயக்குனர் தற்கொலை வரை சென்றார் என்று கூறியிருந்தார்.

இதுபற்றி தயாரிப்பாளர் சமீபத்தில் கூறுகையில், அவர் சரியாக உடல் எடையிலும் கவனமில்லாமல் இருந்ததாலும், ஒழுங்காக தொடர்பு கொள்ளாததாலும் பலநாட்கள் படம் தள்ளிப்போனது.

மேலும் படப்பிடிப்பில் லைட் செட்டப்பை மாற்ற சொல்வார். இரண்டு, மூன்று முறை செய்த கேமராமேன் ஒரு கட்டத்துக்கு மேல் மாற்ற முடியாது என சொல்லிவிட்டாராம்.

அதேபோல் தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் கால்ஷுட் என்றால் அதற்குமேல் அதிகபட்சம் அரைமணிநேரத்துக்குள் முடித்துவிட வேண்டும் இல்லையென்றால் இரண்டு மடங்காக சம்பளம் கொடுக்க வேண்டும்.

இதை தயாரிப்பாளர் இயக்குனரிடம் கூறியதை தொடர்ந்து அவர் தேவையான காட்சிகளை எடுத்ததும் பேக்கப் சொன்னாராம்.

ஆனால், என்னை கேட்காமல் நீ எப்படி பேக்கப் சொல்லலாம் என்ற கோபத்தில் மீதமிருந்த படப்பிடிப்புக்கு முழுவதும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாரளர் ஆதங்கத்தோடு கூறியிருந்தார்.

Comments