Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் உயரத்தை கலாய்த்தவர்களுக்கு விஷால் பதிலடி

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது தானா சேர்ந்த கூட்டம் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக முன்பே செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இது பற்றி சன்மியூசிக் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரண்டு பெண் தொகுப்பாளர்கள் லைவ் ஷோவில் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதத்தில் பேசியுள்ளனர்.

'அனுஷ்காவுடன் நடிக்கும்போதே ஸ்டூல் போட்டு நடிக்கவேண்டியிருந்தது, அமிதாப் பச்சன் என்றால் அவரை கீழே உட்காரவைத்து தான் நடிக்கசொல்லவேண்டும்' என அந்த தொகுப்பாளர்கள் பேசியது ரசிகர்களுக்கு எரிச்சலூட்டியது.

இது பற்றி நடிகர் விஷால் ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார். "காமெடி என்ற பெயரில்... நெறியில்லாமல் பேசியுள்ளனர் Totally senseless," என விஷால் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி அவர்களை கண்டித்து பல பிரபலங்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments