Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல பாசத்துக்காக தலையே இழக்கலாமா, அஜித் ரசிகரின் பைத்தியக்கார செயல் - புகைப்படம் உள்ளே

தல அஜித்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்த செய்தி. அதிலும் தமிழ்நாட்டில் அஜித்தை தன் குடும்பத்தில் ஒருவராக பார்ப்பவர்களும் உண்டு.

சிலர் அஜித் பெயரை உபயோகப்படுத்தி நல்ல நற்பணிகளை செய்கிறார்கள். ஆனால் இன்னும் சில பேர் 'தல'க்காக என்ன வேணாலும் செய்வேன் என்று சில பைத்தியக்காரத்தனமும் செய்கிறார்கள். அதாவது அஜித்தை கடவுளாக கட்அவுட் வைப்பது, உடம்பில் பச்சை குத்துவது என்று சிலர் இருக்கின்றனர்.

இன்று சமூகவலைத்தளத்தில் ஒரு ரசிகர் தல என்ற பெயரை கழுத்தில் பச்சை குத்தியுள்ளார். இது எவ்வளவு அபத்தமான செயலாக இருக்கிறது. இந்த செயல் அருவருக்கத்தக்க செயலாகத்தான் பார்க்க முடியும். தல என்ன சொல்லியிருக்கிறார்.

"முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள், என் படம் பிடித்தால் பாருங்கள், நேரத்தை வீணடிக்காதீர்கள். நல்ல நற்பணிகளை மக்களுக்காக செய்யுங்கள், என் பெயரை உபயோகப்படுத்தி சில கெட்ட விஷயங்களை செய்யாதீர்கள் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அதையும் மீறி இந்த மாதிரியான செயலை பார்ப்பது வருந்தத்தக்க விஷயமாக தான் உள்ளது. இங்கு ஒழுக்கமும், நல்ல உத்வேகத்தையும் கொடுக்க ஆளில்லாமல் போவது தான் பிரச்சனை. குடும்ப உறுப்பினர்கள் தான் அவர்களின் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

Comments