Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்ன வயதில் பொது இடத்தில் விஜய் செய்த ஆச்சரிய விஷயம், தங்கை இழப்பிற்கு பின் அவர் செய்த காரியம்- சுவாரஸ்ய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர். யாரும் சினிமாவில் எடுத்த உடனே பெரிய இடத்தை பிடிப்பதில்லை. அப்படி தந்தை பிரபலமாக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் பலதரப்பட்ட மோசமான விமர்சனங்களை தாண்டி இப்போது பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் விஜய்.

அண்மையில் இவரின் வாழ்க்கையை முற்றிலுமாக அறிந்து அவரை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் சபிதா ஜோசப். புத்தகம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும்போது, விஜய்க்கு தங்கை திவ்யா என்றாலே மிகவும் பிடிக்கும்.

அந்த பெயரில் இருப்பவர்கள் தன்னை பார்க்க விரும்பினால் உடனே அவர்களை சந்தித்து விடுவார். அதோடு தங்கை பெயரில் விஜய் நடத்தும் அறக்கட்டளை மூலமாக நிறைய பேருக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் கூட 200 பேருக்கு கல்விக்கான உதவி செய்துள்ளார்.

ஒரு 6 அல்லது 7 வயதில் விஜய் ஒரு விஷயம் செய்தார். தலைகீழாக விஜய் அருமையாக நடப்பார். ஒரு நாள் அவர் தன்னுடைய வீட்டில் இருந்து அவரது பள்ளி வரை தலைகீழாகவே நடந்துள்ளார். அதை பார்த்த பலர் மிகவும் பரபரப்பாக பேசியுள்ளனர் என்றார்.