Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்

இந்திய சினிமாவில் நீண்ட காலமாக சினிமாவில் நடித்து வரும் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன் ஆகியோரின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் ரசிகர்களை தலைசுற்றவைத்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த ஜெயா பச்சன் தற்போது மூன்றாவது முறையாக தேர்வாகவுள்ளார். அதற்காக அவர் தன் சொத்து விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

460 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து மற்றும் ரூ. 540 கோடி மதிப்புள்ள அசையும் சொத்து என மொத்தம் 1000 கோடி ரூபாய் சொத்திருப்பதாக ஜெயா பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

62 கோடி ரூபாய் தங்க நகை, 13 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள், 4 கோடி ரூபாய்க்கு கடிகாரங்கள், 9 லட்சம் மதிப்புள்ள பேனா என ஜெயா பச்சனின் சொத்து விவரங்கள் நீண்டு கொண்டே செல்கிறது.