Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடபழனி கோவிலில் திருமணம் செய்ய என்ன காரணம்? முனிஷ்காந்த் திருமணத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதையா

தமிழ் சினிமாவில் தன் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் முனிஷ்காந்த். இவரின் முண்டாசுப்பட்டி, மாநகரம், கலகலப்பு-2 ஆகிய படங்கள் ரசிகர்கள் பேவரட்.

இந்நிலையில் இன்று இவர் தோன்மொழி என்ற பெண்ணை சென்னை வடபழனி கோவிலில் திருமணம் செய்துக்கொண்டார்.

பல திரைப்பிரபலங்கள் இவரை நேரிலும் போனிலும் வாழ்த்தி வருகின்றனர், இவர் வடபழனி கோவிலில் திருமணம் செய்ய ஒரு காரணம் உள்ளதாம்.

முனிஷ்காந்த் சினிமா வாய்ப்பு தேடி அழைந்த போது இரவு நேரங்களில் தங்க கூட இடம் இல்லாமல் இந்த கோவிலில் தான் தூங்குவாராம்.

அதன் நினைவாக அந்த கோவிலிலேயே தன் திருமணத்தை செய்து முடித்துள்ளார்.