Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட்க்கு செல்லும் பியார் பிரேமா காதல் !

ஹரிஷ் கல்யாண் , ரைசா நடிப்பில் யுவான்ஷாங்கர் ராஜா இசையில் இளம் இயக்குனர் இலன் கைவண்ணத்தில் உருவாகி வரும் படம் பியார் பிரேமா காதல். பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள இந்தப் படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க பெரும் போட்டா போட்டி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.

பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் ஹிந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது. ' காதலுக்கு மொழி அவசியமில்லை. காதலை பற்றிய படங்களுக்கும் மொழி அவசியமில்லை. " high on love" என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆனதின் பிரதிபலன் இது.

இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், ஹிந்தி ஆக்கத்தை பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை" என்கிறார் இயக்குனர் இலன்.