Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்பட்டதா?- சென்சார் நடந்தது உண்மையா ?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காலா. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது,

குழந்தைகள் முதல் செலிபிரிட்டி வரை அனைவரும் Kiyae Setting Huh என்ற வசனத்தை உச்சரித்து பிரபலப்படுத்தினர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடந்து வரும் ஸ்ட்ரைக் காரணமாக சொன்ன தேதியில் காலா திரைப்படம் ரிலீஸ் ஆவதில் பெரியளவில் சந்தேகம் ஏற்பட்டது. காலா படத்தை சென்சார் செய்வதற்காக தயாரிப்பாளர் சங்கம் NOC கடிதம் கொடுக்க வேண்டும், ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இழுத்தடித்தாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் பரவ தொடங்கியுள்ளன, அதாவது காலா நேற்று இரவு சென்சர் நடந்தது, கிட்டத்தட்ட 14 காட்சிகளை சென்சார் அதிகாரிகள் நீக்கியுள்ளனர் என்கிற செய்தி கசிந்தது, ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வாமாக லைக்கா தயாரிப்பு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments