Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்திக் சுப்ராஜுக்கு பதிலடி கொடுத்த டிக் டிக் டிக் தயாரிப்பாளர் !

பிரபு தேவா நடிப்பில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கி தயாரித்துள்ள படம் மெர்குரி. இப்படம் தற்போது ரிலீஸ்க்கு தயார் நிலையில் உள்ளது , இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகவேண்டிய கடைசி நேரத்தில் கார்த்திக் சில காரணத்தால் படத்தின் ட்ரைலர் ரிலீஸை தள்ளிவைக்கிறோம், ஆனால் இந்த படத்துக்கு பலநூறு மக்கள் வேர்வையும், பணமும் அடங்கியுள்ளது, இந்த படத்தை எப்படியாவது 13 ம் தேதி வெளியிட சூழ்நிலையில் உள்ளோம் என ட்வீட் செய்தார்.

இதனையடுத்து டிக் டிக் டிக் பட தயாரிப்பாளர் கார்த்திக் போட்ட டிவீட்க்கு பதில் ட்வீட் செய்திருந்தார் அதில் " கார்த்திக் உங்கள் படத்துக்கும் மட்டும் எல்லாரும் வேர்வை சிந்தி உழைக்கவில்லை எல்லா படத்துக்கும் இது பொருந்தும், நாங்கள் ஒன்றும் பத்து பேரை வைத்துக்கொண்டு சினிமாவை உருவாக்கவில்லை . என் படம் தயாரிப்பு ரீதியில் உங்கள் படத்தை விட பெரிய படம். தமிழசினிமாவின் நலனை கருதி ஒற்றுமையாக செயல்படும் போது நீங்களும் அதில் பங்கு கொள்ள வேண்டும். இதற்கு பிறகு உங்கள் இஷ்டம் என ட்வீட் பதிவிட்டுருந்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் மெர்குரி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கிறோம் என்று கார்த்திக் சுப்ராஜ் அறிவித்தார்.