Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடி வாங்கினாலும் பெண்களை காப்பாற்ற கல்லூரி காலத்திலேயே ஹீரோவாக மாறி விஜய் செய்த செயல் - நண்பர் நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் முன்னணி நடிகர் இளையதளபதி விஜய்.

இவர் சினிமாவில் செய்யும் சாகசத்தை நாம் எப்போதும் பார்த்திருக்கிறோம். ஆனால் சினிமாவில் ஹீரோவாவதற்கு முன்பே நிஜ வாழ்விலும் ஹீரோயிசம் செய்துள்ளாராம்.

இவருடைய நண்பரும், தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் கூறுகையில், நாங்கள் கல்லூரியில் படித்தபோது வடஇந்தியா டூர் சென்றிருந்தோம். அப்போது திடிரென அங்கு கலவரம் நடந்தது. இதனால் பஸ்ஸை உடைத்தனர், பெண்களை தாக்க வந்தனர்.

நாங்கள் எல்லோரும் பயந்து போயிருந்தோம். அப்போது அந்த வயதிலேயே விஜய் ஹீரோ போல பெண்கள் முன்பு நின்று அவர்களை காப்பாற்றினார். அடிவாங்கினாலும் அவர்களையும் திருப்பி அடித்தார். பின்னர் போலிஸ் வந்த பின்புதான் நாங்கள் பத்திரமாக திரும்பி வந்தோம்.

ஆனால் உயிர் போய் வந்தது போலத்தான் எங்களுக்கு இருந்தது என்று அந்த சம்பத்தை சஞ்சீவ் சமீபத்திய பேட்டியொன்றில் நினைவு கூர்ந்தார்.

Comments