Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போராட்டத்தில் ரஜினியை தவிர்த்த விஜய், ஏன்?

தமிழகத்தில் காவேரி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இளைஞர்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராட, நடிகர்கள் தங்கள் பங்கிற்கு இன்று மௌனப்போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் வர, அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், கமல், ரஜினி ஆகியோர் வந்தனர்.

ரஜினி வந்த போது அவருக்கு அருகில் சிவகார்த்திகேயன் தான் அமர்ந்திருந்தார், சிவகார்த்திகேயனுக்கு அருகில் விஜய் அமர்ந்திருந்தார்.

அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன், விஜய்யிடம் நீங்கள் அமருங்கள் என கூற, விஜய் ரஜினி அருகில் அமர மறுத்துவிட்டார்.

ஏன் விஜய் ரஜினி அருகில் அமரவில்லை, என சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல் பல விவாதங்களை தொடங்கிவிட்டனர்.

Comments