Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மற்றதை பற்றி பேச விரும்பவில்லை, ஆனால் அஜித் போராட்டத்திற்கு வந்திருக்கலாம்- பிரபல நடிகையின் ஆதங்கம்

தமிழ்நாடு என்றாலே போராட்ட களம் என்பது போல் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளது.

மக்களை அவர்களது வாழ்க்கையை தாண்டி போராட்டத்தில் ஈடுபட வைக்கும் இந்த அரசு என்ன செய்கிறது என்று தெரியவில்லை. பொது மக்கள் நாட்டிற்காக போராடி வரும் நிலையில் நடிகர்கள் சார்பாகவும் இன்று அமைதி போராட்டம் நடந்தது.

இன்று நடந்த போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா என பல நடிகர்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த நிலையில் இப்போராட்டத்தில் அஜித் கலந்துகொள்ளாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டரில், அஜித்தும் வந்திருக்கலாம் என்று பதிவு செய்துள்ளார்.