Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வழிப்பறி திருடனை நிஜத்தில் துரத்தி பிடித்த ஒரே நாயகன் இவர் தான் - சத்யராஜ் கூறிய தகவல்!

நடிகர் விஜயகாந்த் தமிழ் திரையுலகத்தில் 40 ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி நேற்று அவருக்கு பாராட்டு விழாவை நடத்தியது கலையுலகம்.

இதில் சமகால நடிகர்களான சத்யராஜ், சரத்குமார், நாசர். ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், எஸ் ஏ சந்திரசேகர் போன்றவர்கள் கலந்து கொண்டு அவருடன் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர். இதில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், எம்.ஜி.ஆர் ஏழைகளுக்கு அள்ளி கொடுத்தவர் அதை எங்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் விஜயகாந்த், பலபேருக்கு அவர் அள்ளி கொடுத்துள்ளார்.

அதே சமயம் தைரியமான மனிதர், ஒரு சமயம் நடிகர் சங்கம் கடனை அடைப்பதற்காக எல்லா நடிகர்களின் வீட்டுக்கும் சென்றார், அப்போது ஆச்சி மனோரமா வீட்டுக்கு சென்று விட்டு வரும்போது அவரது பார்வையில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் நடக்கிறது, உடனே வண்டியிலிருந்து இறங்கி ஓடிப்போய் அவரை பிடித்தார் விஜயகாந்த், இவர் ஒரு ரியல் ஹீரோ என குறிப்பிட்டார் சத்யராஜ்.

Comments