Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கி பேசிய சரத்குமார் !

தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி நடிகர் விஜயகாந்துக்கு அவரது அரசியல் நிர்வாகிகளுடன் பாராட்டு விழா நடத்தியது தேமுதிக கட்சி. இதில் பல முன்னணி மூத்த நடிகர்கள் கலந்து கொண்டு விஜயகாந்துடன் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், அரசியல் களத்தில் வேறுவேறு திசையில் இருந்தாலும் ஒரு நல்ல மனிதருக்காக வந்திருக்கிறேன், ஒரு கட்டத்தில் துன்ப பாதையில் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் விஜயகாந்த், இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்.

புலன்விசாரணை என்ற படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு அதிக காட்சிகள் கொடுத்து அழகுபார்த்தவர், பலருக்கும் இந்த குணம் இருக்குனு சொல்வாங்க, ஆன இந்த மேடையில் சொல்லக்கூடாது இருந்தலும் சிலர் பேர் நல்லவங்க மாதிரி இப்போ நடிச்சிட்டு இருக்காங்க, அவர்களெல்லாம் வீரர்கள் இல்லாத களத்திலே வீரர்களாக வருபவர்கள், போர்க்கு செல்பவன் பலமான வீரமான படை இருந்தால் போர்க்கு செல்ல வேண்டும், வலிமையில்லாத போது அந்த போர்க்கு செல்பவன் வீரனாக இருக்க முடியாது.

இந்த மேடையில் இருப்பவர்கள் உண்மையான வீரர்கள் , உங்களுக்காக தமிழ் மக்களுக்காக போராடும் வீரர்கள் என மறைமுகமாக ரஜினி ,கமலை தாக்கி பேசினார் சரத்குமார்