Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த் தமிழரே இல்லை, உங்கள் வேஷம் கலைகிறது - பிரபல இயக்குனர் மூத்த பாய்ச்சல்!

சமீபத்தில் காவேரி மேலாண்மை அமைக்கக்கோரி தமிழ் அமைப்புக்கள் சேர்ந்த பல்வேறு இளைஞர்கள் களப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இயக்குனர் பாரதிராஜா. சீமான், வெற்றிமாறன், கரு பழனியப்பன் போன்ற பிரபல இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

ஒரு கட்டத்தில் களப்போராட்டம் கலவர பூமியாக மாறியது, போலீசார் சில போராட்டக்கார்களை தாக்க பதிலுக்கு போராட்டக்கார்கள் போலீசாரை தாக்க பெரிய கலவரமாக வெடித்தது.

இதனை கண்ட ரஜினிகாந்த் போராட்டக்கார்கள் போலீசாரை தாக்குவது அநாகரிகமான செயல் என ட்வீட் செய்திருந்தார். இதனால் மீண்டும் ரஜினி சர்ச்சையில் சிக்கினார்.

ஏன் அவர் கண்ணனுக்கு என் தமிழ் இன இளைஞர்கள் போலீசாரால் தாக்கப்படுவது தெரியவில்லையா, அவர் பின்னாலிருந்து யாரோ செயல்படுகின்றனர் என சிலர் குற்றசாட்டு வைத்தனர்.

இந்நிலையில் இன்று இயக்குனர் பாரதிராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில், காவேரி மேலாண்மை போராட்டம் அறவழியில் நடந்தது, ஆனால் நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம் மீதே கத்தி வைத்து பதம் பார்க்க நினைக்கிறது ரஜினியின் சமீபத்திய ட்வீட்.

அறவழியில் போராடிய என் தமிழ் இன இளைஞர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா, தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று காழ்ப்புணர்ச்சி தெரிகிறது உங்கள் பேச்சில்.

தமிழன் கொட்டிக்கொடுத்த பணத்தில் வாழும் நீங்கள் தமிழர்களுக்காக என்ன செய்தீர்கள், இப்போது தான் தெரிகிறது, நீங்கள் தமிழர் இல்லை, கர்நாடகாவின் தூதுவர், உங்கள் வேஷம் கலைகிறது.

உங்கள் வீட்டு சாப்பாட்டுக்கும், தண்ணீருக்காகவும் தான் போராடுகிறோம் என்று புரிந்துகொள்ளங்கள், பேசும்போது எதை பேசுகிறோம் என்று உணர்ந்து பேசுங்கள் இலையென்றால் என் தமிழ் மக்களால் வெகுவிரைவில் ஒதுக்க படுவீர்கள், அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Comments