Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பா எப்போதும் தன்னுடன் இருக்க சண்முகபாண்டியன் செய்த செயல் - புகைப்படம் உள்ளே

புரட்சி கலைஞர் விஜயகாந்த் திரைத்துறையில் தனது நாற்பது ஆண்டுகாலத்தை நிறைவு செய்ததையொட்டி நேற்று தேமுதிக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல முன்னனணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விஜயகாந்துடன் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.

ஆனால் அவரது மகன் சண்முகபாண்டியன் லண்டனில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்நிலையில் லண்டனிலிருந்து ஒரு வீடியோ மூலம் அப்பாவுக்கு வாழ்த்துக்கள் கூறி அனுப்பியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சுண்டியிழுக்கும் விஜயகாந்த் கண்ணை அவர் டாட்டூவாக அவரது கையில் வரைந்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், என் அப்பாவுக்கு முதலில் வாழ்த்துக்கள், 150க்கும் மேல் தமிழ் படங்களில் நடித்த ஒரே நடிகர். அதுமட்டுமில்லாமல் நான் சாகும் வரை என் அப்பா என்னுடன் இருக்க வேண்டும் என்பதற்க்காக என் அப்பாவின் கண்ணை என் கையில் வரைந்துள்ளேன் என கூறினார்.