Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலத்தின் பிறந்தநாளை ஒன்று சேர்ந்து கொண்டாடிய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்

ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-தனுஷ் இவர்களுக்கு அடுத்து கூறப்படுவது சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி.

இவர்கள் ஆரம்பத்தில் இருந்து தங்களது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர், நீ பெரிதா நான் பெரிதா என்ற போட்டி எல்லாம் இவர்களிடம் இல்லை. அதிலும் இவர்கள் இருவருமே தங்களுடைய கடின உழைப்பு மூலம் இந்த உயரத்தை அடைந்தவர்கள்.

நேற்று (ஏப்ரல் 16) பாடலாசிரியர் விவேக் அவர்களின் பிறந்தநாள், அந்த ஸ்பெஷல் நாளில் இளைய தளபதி விஜய் அவர்கள் போன் செய்து வாழ்த்து கூறினார் என்ற தகவலையும் அவர் கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சந்தோஷ் நாராயணன் என இவர்கள் அனைவரும் விவேக் அவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.