தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் அஜித், விக்ரம். இதில் அஜித்தை மட்டும் எப்போதும் எல்லோரும் ‘அவர் கஷ்டப்பட்டு வந்தார், தன்னை தானே செதுக்கினார்’ என்பார்கள்.
அதற்கு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை, ஆனால், அஜித்தை விட பல மடங்கு சினிமாவில் கஷ்டப்பட்டவர் விக்ரம் தான், ஒரு ஹிட்டிற்காக 16 வருடம் தவம் இருந்தவர்.
எப்படியாவது இந்த சினிமாவில் வெற்றி என்ற பழத்தை சுவைத்துவிட வேண்டும் என்று பல வருடங்களாக தவம் இருந்து சேதுவாக உருமாறி அதை சுவைத்தார்.
ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் விக்ரம் அடையாத கஷ்டங்களே இல்லை, அவருக்கு ஒரு மேஜர் விபத்து ஏற்பட, இனி விக்ரம் எழுந்து கூட நடக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
கடைசியாக சீரியலில் நடிக்கும் நிலைமைக்கு கூட தள்ளப்பட்டார், அந்த நேரத்தில் தான் சேது தொடங்கியது, சேது படத்தில் இருந்த சோகத்தை விட படப்பிடிப்பில் நடந்த சோகங்கள் தான் அதிகம்.
பல முறை படப்பிடிப்பு நின்றது, படம் முடிந்தாலும் வெளிவருவதில் சிக்கல், என பல இன்னல்களிலும் பாலா-விக்ரம் இருவரும் உறுதியாக இருந்ததால் சேது வெளிவந்து விக்ரம் என்ற நடிகனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது.
படத்திற்கு படம் வித்தியாசம், புது புது முயற்சி என கலக்கி வரும் விக்ரம் தன் 52வது வயதில் காலடி எடுத்து வைக்கின்றார், அவர் இன்று போல் என்றும் மக்கள் அன்பில் வலம் வர சினிஉலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.