Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பார்த்திபன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு- அதிர்ச்சியில் நடிகர்

பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் அலுவலகத்தில் திருட்டு நடந்துள்ளது.

சிறிய வகை தங்கக் கட்டி, தங்க முலாம் பூசப்பட்ட 5 விருது பதக்கங்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பார்த்திபன் நேற்று முன்தினம் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவான்மியூர் போலீசார் கூறும்போது, நடிகர் பார்த்திபன் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக புகார் வந்திருப்பது உண்மைதான். ஆனால், திருடு போன பொருட்களின் மதிப்பு குறித்து உறுதியாக தெரியவில்லை.

இது வெளிநபர்கள் செய்ததா, அங்கு வேலை செய்பவர்களே திருட்டில் ஈடுபட்டார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று கூறியுள்ளனர்.

Comments