Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்டண்ட் யூனியன் கலைஞர்களுக்காக விஜய் சேதுபதி செய்த பாராட்டுக்குரிய செயல் !

திரைப்படத்துறையில் உள்ள சண்டைப்பயிற்சி கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது ஸ்டன்ட் யூனியன். இது தொடங்கப்பட்ட 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து மருத்துவ முகாம் நடத்தியது. அதில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

ஏராளமான உறுப்பினர்கள் இரத்த தானம், கண் தானம் செய்தனர்.விழாவில் விஜய்சேதுபதி கலந்துகொண்டு இரத்ததானம் செய்தது அனைவரையும் நெகிழச்செய்தது குறிப்பிடத்தக்கது .